ரே‌ஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் ..நாளை முதல் டோக்கன்!

 ரே‌ஷன் கடைகளில் இலவச மளிகை பொருட்கள் ..நாளை முதல் டோக்கன்!

கருணாநிதி பிறந்த நாளான கடந்த 3-ந் தேதி ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்காக நாளை (11-ந் தேதி) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. ரே‌ஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கனை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 14-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்று ரே‌ஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

15-ந் தேதி முதல் ரே‌ஷன் கடைகளில் 14 வகை மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், ரூ.2 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. அரிசி கார்டு வைத்துள்ள 2.11 கோடி குடும்பத்தினர் இதன் மூலம் பயன் அடைய உள்ளனர்.

கோதுமை மாவு-1 கிலோ, உப்பு -1 கிலோ, சர்க்கரை-500 கிராம், உளுத்தம்பருப்பு- 500 கிராம், புளி-250 கிராம், கடலை பருப்பு-250 கிராம், கடுகு-100 கிராம், சீரகம்-100 கிராம், மஞ்சள் தூள்-100 கிராம், மிளகாய் தூள்-100 கிராம், டீத்தூள் -100 (2 பாக்கெட்டுகள்), குளியல் சோப்-1 (125 கிராம்), சலவை சோப்-1 (250 கிராம்) ஆகிய 14 பொருட்கள் சிறப்பு தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்த பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனைத்து ரே‌ஷன் கடை களுக்கும் இன்னும் சில தினங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. ரே‌ஷன் கடை ஊழியர்களே அவைகளை பார்சல்களாக போட்டு தயார் செய்ய உள்ளனர்.

பின்னர் பொதுமக்களிடம் டோக்கன்களை பெற்றுக்கொண்டு மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பையும், ரூ.2 ஆயிரம் நிவாரண உதவியையும் வழங்க உள்ளனர்.

இதற்கிடையே பல்வேறு ரே‌ஷன் கடைகளில் கடந்த வாரமே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த டோக்கன்களில் 11-ந் தேதிக்கு முந்தைய தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோன்று வினியோகம் செய்யப்பட்ட டோக்கன்களில் தேதியை மாற்றி கொடுக்க ரே‌ஷன் கடை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

 • 1 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !