தேர்தல் தொடர்பான செலவின கணக்கு: மூன்று கட்டமாக பார்வையாளர் ஆய்வு

 தேர்தல் தொடர்பான செலவின கணக்கு: மூன்று கட்டமாக பார்வையாளர் ஆய்வு

தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக மார்ச், 26, 30, ஏப்., 3ல், என மூன்று கட்டங்களாக பார்வையாளர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என, மாவட்ட தேர்தல் அலுவலர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மார்ச், 26, 30 மற்றும் ஏப்., 3 ஆகிய நாட்களில் காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை, தேர்தல் செலவின கணக்குகள் தொடர்பாக, செலவின கணக்குகள் தேர்தல் செலவின பார்வையாளர் பியூஸ்பாட்டியால் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் குறிப்பிட்ட நாட்களில், தேர்தல் செலவு தொடர்பான பதிவேடுகள், ரசீதுகள், வங்கி புத்தகம் மற்றும் உரிய அனைத்து அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஆய்வுகள் நடக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

  • 9 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !