உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா!

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோவிட்- 19 தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர்தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 62,258 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட்டில் ‘கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதைத்தொடர்ந்து நான் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனது குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். ஆனால் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. என்னைப் போலப் பலரது உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது. இந்தச் செய்தியால் சச்சினின் லட்சக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.