Category: Movies

தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்..

நடிகர் விஜய்யின் 64-வது படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக கூறியது. இந்நிலையில், மாஸ்டர் படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தியேட்டரில் விசிலடித்து, ஆரவாரம் செய்து படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு என ஏக்கத்துடன் […]

அருண் விஜய்யின்‘சினம்’ டீஸர் !

அருண்விஜய் நடிப்பில் GNR குமரவேலன் இயக்கத்தில் வெளியாகும் படம் ‘சினம்’. குப்பத்து ராஜா,சிக்ஸர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலக் லால்வானி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அருண் விஜய் போலீசாக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடந்து வந்தன. மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது சினம் படத்தின் டீஸர் வெளிவந்துள்ளது.

விக்ரம் நடித்துள்ள ‘கோப்ரா’ டீஸர்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. இசை – ஏ.ஆர். ரஹ்மான். கோப்ரா படத்தில் ஏழு வேடங்களில் விக்ரம் நடிப்பதாக அறியப்படுகிறது. இதையடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர், ஜனவரி 9-ம் தேதி […]

ஈஸ்வரன் டிரைலர் வெளியீடு

சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலா சரவணன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இதில் சிம்பு நீ அசுரனா… […]

கே.ஜி.எஃப்- 2இன் பிரம்மாண்ட டீஸர்!

யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் கே.ஜி.எப் 2ம் பாகம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த படத்தின் டீஸர் […]

அனிருத் ரிலீஸ் செய்த ’’ஆல்பம் பாடல்’’…

தமிழ் சினிமாவின் இரட்டை இசை அமைப்பாளர்கள் விவேக் – மெர்வின், வடகறி படத்தில் இசை அமைப்பாளர்களாக அறிமுகம் ஆனார்கள். அதைத் தொடர்ந்து இவர்கள் வடகறி, டோரா, புகழ், பிரபுதேவாவின் குலேபகாவலி , தனுஷ் பட்டாசு , விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தனர். இந்நிலையில் தற்போது ஒரு ஆல்பம் பாடல் தயாரித்துள்ளனர். இதற்குப் பக்கம் நீயுமில்லை என்று பெயர் வைத்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு சோனி மியூசிக் சவுத் என்ற […]
Page 1 of 12712345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news