மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ தெலுங்கு டீசர் வெளியீடு

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை பல மொழிகளில் ஒரே நாளில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழில் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி வெளியான மாஸ்டர் டீஸர் 48 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. தமிழைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு டீஸரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது..

இதனை தொடர்ந்து, தமிழ் ட்ரைலர் ஆங்கில புத்தாண்டு அன்று வெளியிடபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news