ஹரி இயக்கத்தில் வெளியான சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த மாதம் வெளியானது.

சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஜனவரி 15-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்னிலையில் இயக்குநர் ராஜேஷ் செல்வா கடாரம் கொண்டான் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு படத்தை பற்றி கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : கடாரம் கொண்டான் படத்தின் பெரும்பான்மையான பணிகள் முடிந்துவிட்டது.

இன்னும் பாடல் காட்சிகளும் சிறுசிறு வேலைகள் மட்டும் மீதம் இருக்கிறது என பதிவிட்டுள்ளார். அடுத்த வாரம் படத்தின் முன்னோட்ட காட்சி [teaser] வெளியவிருப்பதால் படப்பிடிப்பு வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த செய்தியை விக்ரம் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
