ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியான மாநாடு டீசர்!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. பொங்கலுக்கு மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சற்று முன்னர்,  2.34 மணியளவில் ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘மாநாடு’ படத்தின் டீசரை தமிழில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தியில் இயக்குநர் அனுராக் காஷ்யப், மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், தெலுங்கில் நடிகர் ரவிதேஜா மற்றும் கன்னடத்தில் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டு படத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news