லிடியனை இசையமைப்பாளராக அறிவித்த மோகன்லால்!!

நடிகர் மோகன்லால், சில மாதங்களுக்கு முன்பு இயக்குநராக களமிறங்க இருப்பதாக அறிவித்தார். ‘பாரோஸ் கார்டியன் ஆப் தி காமா’ஸ் ட்ரெஷர்’ (Barroz Guardian Of D Gamas Treasure) என்கிற இந்த வரலாற்று படத்திற்கு இசையமைப்பதற்காக இவர் மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் யாரையும் தேடவில்லை. மாறாக லிடியன் நாதஸ்வரம் என்கிற 14 வயது சிறுவனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இந்த செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற மோகன்லாலின் ‘லூசிபர்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவோடு சேர்த்து ‘பாரோஸ்’ படத்திற்கான இசையமைப்பாளர் அறிமுக விழாவையும் நடத்தி இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் மோகன்லால்..

இந்த லிடியன் நாதஸ்வரம், ஏ.ஆர்.ரகுமான் நடத்திவரும் கே.எம்.மியூசிக் கன்சர் வேட்டரி மாணவன் என்பதும், சர்வதேச அளவில் நடைபெற்ற வேர்ல்ட் பெஸ்ட் டேலண்ட் ரியாலிட்டி ஷோவில் இந்தியா சார்பாக பங்கேற்று டைட்டிலை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news