#WorldYogaDay : ” நோயற்ற வாழ்வுக்கு யோகாசனம் “

 #WorldYogaDay : ” நோயற்ற வாழ்வுக்கு யோகாசனம் “

யோகாசனம் என்பது பழகாலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள், பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அரிய பொக்கிஷத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பதஞ்சலி முனிவர் தான்.

உங்களின் உடலுக்காக தினசரி அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒதுக்குங்கள். முதலில் சற்று தினசரி தடுமாற்றம் ஏற்படும். பிறகு போகப்போக அன்றாட வாழ்க்கையில் யோகா ஓர் அங்கமாக மாறிவிடும்.

தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக யோகாசன பயிற்சி செய்யலாம். யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு பிராணாயாமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.

நீர் ஆகாரமாக இருந்தால், அருந்திய பின் அரை மணி நேரம் கழிந்த பின்பும், எளிய சிற்றுண்டியாக இருந்தால் இரண்டு மணி நேரம் கழித்தும், முழுமையான ஆகாரமாக இருந்தால் நான்கு மணி நேரம் கழித்தும் யோகப்பயிற்சிகளை செய்யவும்.

எடை குறைப்பில் ஈடுபடும் போது உணவு குறைப்பது, கடுமையான தொடர் உடற்பயிற்சி போன்றவற்றால் உடல் எடை குறைந்தாலும் அவை ஆரோக்கியமானதல்ல என்பதே உண்மை. ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைய வேண்டுமெனில் எளிமையான யோகாசனங்களே போதுமானது

  • 5 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !