சுவையான ‘ பாசிப்பருப்பு ‘ வெஜிடபிள் கிச்சடி!

 சுவையான  ‘ பாசிப்பருப்பு ‘ வெஜிடபிள் கிச்சடி!

முக்கிய பொருட்கள்3/4 கப் பாசிப் பருப்புபிரதான உணவு1/4 கப் அரிசி1 Numbers தக்காளி1 கப் கேரட்1 கப் முட்டைக்கோசு1 கப் பட்டாணி1/2 கப் குடை மிளகாய்1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்1 Numbers பச்சை மிளகாய்1 தேக்கரண்டி நெய்1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைதேவையான அளவு உப்புதேவையான அளவு மிளகாய் பொடி1/2 தேக்கரண்டி மஞ்சள்தேவையான அளவு பெருங்காயம்1 தேக்கரண்டி சீரகம்

Step 1:ஒரு குக்கரில் பாசிப்பருப்பை போட்டு பொன்னிறமாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கோங்க. அதிலேயே கழுவிய அரிசியை சேர்த்து தேயைான அளவு தண்ணீரை விடுங்கள். அடுப்பை பற்ற வைத்து தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் உப்பையும் மஞ்சளையும் அதில் சேர்த்து, குக்கரை மூடி 6 முதல் 7 விசில் வரும் வரை வேகவிடுங்க.

Step 2:ஒரு பேனில் நெய் விட்டு, அதில் பெருங்காயம், சீரகம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நல்லா வதக்குங்க. இப்போது இதில் நறுக்கிய கேரட், முட்டைகோஸை சேர்த்து வதக்குங்க. பிறகு பச்சை பட்டாணியும் சேர்த்து தொடர்ந்து வதக்குங்க.

Step 3:இப்போது இந்த கலவைல நறுக்கிய குடை மிளகாயையும் சேர்த்து வதக்குங்க. காய்கஙிகள் எல்லாம் நல்லா வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்துக்கோங்க. பிறகு பச்சை மிளகாயையும் சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு சிகப்பு மிளகாய்த் தூள் ஆகிய பொருட்களை போட்டு எல்லா பொருட்களை நல்லா கலந்துவிட்டு மிதமான தீயில் 3 முதல் 4 நிமிடங்கள் வேக விடுங்க.

Step 4:இப்போது ஏற்கனவே குக்கரில் வேகவைத்து வைச்சிருக்குற அரிசி பருப்பு கலவையை குக்கர் ஆறியதும் திறந்து, அதில் நாம தயாரிச்சு வெச்சிருக்கிற காய்கறி மசாலா கலவையை சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நல்லா கலந்து விடுங்க.

Step 5:சூடாக இருக்கும்போதே மேலாக 1 ஸ்பூன் நெய்யை விட்டு கலந்து சூடாக பரிமாறுங்க

  • 15 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !