அற்புத குணங்களை கொண்ட ‘பாதாம் பிசின்’ பயன்கள்!

 அற்புத குணங்களை கொண்ட ‘பாதாம் பிசின்’ பயன்கள்!

மதுரையில் இருந்து உலகப்புகழ் பெற்ற ஜிகர்தண்டாவின் ருசிக்கு முக்கிய காரணம் பாதாம் பிசின். ஜிகர் தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம் பிசின் பற்றி நமக்கு தெரியாது. இயற்கை நமக்கு அளித்த அற்புதமான மருந்தே உணவுகளில் இதுவும் ஒன்று.

வெயில் காலத்தில் நமக்கு வருகிற முதல் பிரச்னை உடல் உஷ்ணம். பாதாம் பிசின் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதில் செலவுக் குறைவான இயற்கைத் தீர்வு. தவிர, உஷ்ணத்தால் உண்டாகும் சோர்வையும் நீக்கும்.

* உடலில் ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அதற்குக் காரணமான கிருமியை வெளியேற்றி விடும்.

* வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு எனப் பித்தம் சார்ந்த நோய்களையும் இந்தப் பிசின் போக்கும்.

* கருப்பையில் லேசான புண் இருந்தாலும், மெல்ல மெல்ல அதை ஆற வைத்து விடும் தன்மை கொண்டது பாதாம் பிசின்.

* கர்ப்பிணிகளுக்கு பொதுவாகவே மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் மாதமாக இருக்கிறார்களென்றால் இந்தப் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட கர்ப்பிணிகளுக்கும் பாதாம் பிசினை ஊற வைத்துக் கொடுக்கலாம்.

* காரம் அதிகமான, மசாலாக்கள் தூக்கலாகச் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு வாயுக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஏற்படும். இந்த மூன்றையும் பாதாம் பிசின் சரியாக்கும்.

* சிலர் வேலைக் காரணமாக எப்போதும் தாமதமாகவே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு நெஞ்சரிச்சல் வரும். பழக்கமில்லாமல் திடீரென காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிறு எரிய ஆரம்பிக்கும். இப்படிப்பட்டவர்கள் ஊற வைத்த பாதாம் பிசினைப் பாலுடன் கலந்து குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

* சில பெண்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் மெலிவாகவே இருப்பார்கள். அவர்களுக்குப் பாதாம் பிசினை ஊறவைத்து பாலுடன் கலந்து தரலாம். நன்கு புஷ்டியாவார்கள்.

* சிறுநீரகத்தில் வருகிற கற்கள், சிறுநீர்ப் பாதையில் வளர்கிற சதை இரண்டையும் இந்தப் பிசின் கரைக்கும். அதனால்தான், சித்த மருத்துவம், பாதாம் பிசினை கல்லடைப்பு ,சதையடைப்புப் போக்கும் என்று புகழ்கிறது.

* வெயில் காலத்தில் பல பெண்களும் சந்திக்கிற ஒரு பிரச்னை வெள்ளைப்படுதல். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை சாப்பிட்டு வர, இந்தப் பிரச்னை சத்தமில்லாமல் சரியாகும்.

* வெயில் காலம் வந்தாலே பெண்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் வந்து விடும். அடிக்கடி சிறுநீர் வரும், அதுவும் கடுப்புடன் சொட்டு சொட்டாகத்தான் போகும். இந்தப் பிரச்னையையும் பாதாம் பிசின் சரி செய்யும்.

 • 25 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !