யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பில் கே.ஜி.எப் 2ம் பாகம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த படத்தின் டீஸர் இணையத்தில் லீக் ஆனதால், படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த டீசர் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.