கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை தியேட்டருக்கு பதிலாக வருகிற 29-ந் தேதி ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்கின்றனர். இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ படத்தையும் தியேட்டர்களுக்கு பதிலாக ஒடிடி தளத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஜூன் மாதம் 19-ந் நேரடியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Janhvi Kapoor says she wrote “I love you” on actor’s Instagram post and confesses that she flirts a lot