இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக இஸ்ரோ அனுப்பிய 100ஆவது செயற்கைக்கோளான கார்டோசாட்-2 சற்றுமுன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பு தகவல் தொடர்பு போன்றவற்றின் ஆய்வுக்காக பி.எஸ்.எல்.வி. – ஜி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது இஸ்ரோ.
பூமியை கண்காணிப்பதுடன், உயர் தரத்திலான புகைப்படங்களை எடுத்து அனுப்பும். வானில் மேக்கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படும் எடுத்து அனுப்பும் . இந்த செயற்கைகோள் 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள கார்டோசாட் செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் நாட்டின் எல்லை பகுதிகளை துல்லியமாக புகைப்படம் எடுத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.
புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செய்தியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்டனர். இன்னும் சில நிமிடங்களில் தன் பணிகளைத் தொடங்க உள்ளது கார்டோசாட்-2 செயற்கைக்கோள்.