‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் காமெடி கதாபாத்திரம் ஏற்றுள்ளார். ராதா ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இரண்டு முன்னணி நடிகர்களுக்கிடையிலான நட்பைக் காணும் என்று கூறப்படுகிறது.

நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி இருவரும் இணைந்து “களத்தில் சந்திப்போம்” என்ற படத்தில் நடித்து வருகின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் ஒரு படத்தை அவரது அப்பா ஆர்பி சவுதிரி, சூப்பர் குட்ஸ் ஃபிளிம்ஸ் சார்பாகத் தயாரித்துள்ளது. கிராமத்துக் கதையம்சம் கொண்ட இந்த படத்தை என்.ராஜசேகர் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு, அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கொரோனா பிரச்சனையால் ரிலீசாகாமல் முடங்கியிருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தைப்பூசத்தன்று (ஜனவரி 28) தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட உள்ளனர்

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news