மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் ‘தடக்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. அதன் பின் ஜான்வி நடிக்க சம்மதிக்கவில்லை என்று செய்தி பரவியது. பின்னர், ஜான்வியின் அப்பா போனி கபூர், தன் மகள் தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஜான்வி 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி வரியை தயாரிப்பாளர்தான் செலுத்த வேண்டுமாம். மேலும், அவருடன் வரும் பணியாளர்களுக்கும் ஜான்விக்கு என்ன வசதி வழங்கப்படுகிறதோ அதே வசதிகளைத் தர வேண்டுமாம். 7 நட்சத்திர ஓட்டல், முதல் வகுப்பு விமானப் பயணம் என மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் மொத்தமாக 7 கோடி செலவாகிறதாம்.
எனவே, ஜான்வியிடம் மொத்தமாக 3 கோடிக்குள் முடித்துக் கொள்ள பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் அது பற்றிய மேல் விவரங்கள் தெரிய வரும் என்கிறார்கள்.