ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைப்பு: பிசிசிஐ வட்டாரங்கள்

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி இன்று காலை அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், ஐபிஎல் போட்டிகளும் மே 3 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி இப்போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பில்லை எனவும், போட்டியை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மே 3ம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news