கோலி பற்றி குறைசொல்லும் கம்பிர் ” -ஆர்.சி.பி கேப்டன்ஷிப் குறித்து கம்பீர் கருத்து !

மே மாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தல் மற்றும் ஐபில் தொடர் காரணமாக இந்தியா முழுவதும் பரபரப்பாக சூழ்நிலை உருவாகியுள்ளது. ஐபில் தொடரை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது .சென்னை சேப்பாக்கத்தில் வீரர்களின் பயிற்சியைக் காண ரசிகர்கள் கூடுகின்றனர். சமூகவலையங்களில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என விவாதங்கள் தொடங்கியுள்ளது.

எந்த நிலையில் பிரபல ஸ்போர்ட்ஸ் சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர், ஐ.பி.எல்யில் தொடர்பாக பேசினார். அப்போது ஆர்.சி.பி அணியின் செயல்பாடு குறித்தும் கோலியின் கேப்டன்ஷிப் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் . அப்போது கம்பீர், ”கோலி இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது. இன்னமும் அவரை நான் ஒரு திறமையான கேப்டனாக பார்க்கவில்லை”. ஆர்.சி.பி அணி இன்னும் ஐ.பி.எல் தொடரை வெல்லவில்லை தெரிவிந்தர்.
கடந்த 8 ஆண்டுகளாகக் கோலி ஆர்.சி.பி அணியை வழிநடத்தி வருகிறார்.இதுவரை ஒரு தொடரை கூட ஆர்.சி.பி அணி வெற்றிபெறவில்லை ,இதற்கு கோலி நிர்வாகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் கொஞ்சம் லக்கி என நான் நினைக்கிறேன். ஏனென்றால் ,இத்தனை ஆண்டுகள் ஓர் அணி நிர்வாகம் கோப்பை வெல்லாமல் ஒருவரையே கேப்டனாக வைத்துக்கொண்டு இருப்பது இதுவே முதல்முறை ” என்றார் கூறியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news