“1097 வீரர்கள்”… ஐபிஎல் 2021 ஏலத்திற்கு பதிவு!

ஐபிஎல் 2021 ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது.


இதையொட்டி 8 ஐபிஎல் அணிகளும் சில வீரர்களை தக்க வைத்தும் சில வீரர்களை விடுவித்தும் உள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்திற்கென 814 இந்திய மற்றும் 283 வெளிநாடுகளை சேர்ந்த வீரர்கள் என மொத்தமாக 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன் முடிவுற்றது. பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம் பின்வருமாறு:
மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆஸ்திரேலியா – 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து – 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் – 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் – 5 வீரர்கள், அயர்லாந்து – 2 வீரர்கள், அமெரிக்கா – 2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து – 1 வீரர்.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news