‘கர்ணன்’ அப்டேட்: தனுஷுடன் இணைந்த குட்டி த்ரிஷா!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் மற்றும் பட்டாஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கி வரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் புதிய ஸ்டில் ஒன்றை தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்ட போது அந்த ஸ்டில்லுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷுடன் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் அவருடன் இணைந்து உள்ளதாக கெளரி கிஷான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தனுஷின் கர்ணன் படத்தில் தான் இணைந்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் திறமை மிகுந்த ஒரு இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news