திரௌபதி திரைவிமர்சனம் – InandoutCinema Public Review…

மிகவும் சர்ச்சைக்குரிய திரைப்படமான ‘திரௌபதி’ இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை’ பட இயக்குநர் மோகன்.ஜி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’.மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பிறகு காதல் வைரஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்த ரிஷி ரிச்சார்டு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ரிஷியுடன் இப்படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜூபின் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு மனோஜ் நாராயணன் கேமரா கையாள, தேவராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வேல் முருகன் பாடிய ‘கண்ணாமூச்சி ஆட்டம்’ பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news