பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகவும் பொருளாதார வல்லரசாகவும் வளர்ந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க தயாராக உள்ளோம். பாதுகாப்பு துறையில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாக உள்ளன. ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை இந்தியாவிற்கு தர இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளன.
டிரம்ப் தமது உரையில் பிரதமர் மோடியை பலமுறை பாராட்டினார். மோடியை அவ்வளவு சீக்கிரமாக கணிக்க முடியாது, அவர் கடினமானவர்என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். டீ விற்பனையாளராக இருந்து நாட்டின் தலைவராகியுள்ளார் மோடி என அவர் புகழ்ந்தார். இந்திய மக்களுக்காக இரவு-பகலாக மோடி உழைத்து வருகிறார் என அவர் புகழாரம் சூட்டினார்.