மகனை உலகிற்கு காட்டிய இயக்குனர்!

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் இளைய மகன் ஏ.எல்.விஜய், கீரிடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘பொய் சொல்லப் போறோம்’, ‘மதராச பட்டினம்’, ‘தெய்வ திருமகள்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘தேவி’, லக்ஷ்மி ஆகிய படங்களை இயக்கி பெரும் பிரபலமடைந்தார்.

இவர் தெய்வ திருமகள் படத்தின் போது அந்த படத்தில் நடித்த அமலா பாலுடன் காதல் வயப்பட்டு 2014 ஆம் திருமணம் செய்துக்கொண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா (MBBS) என்ற பெண்ணை கடந்த வருடம் 2வதுதிருமணம் செய்துகொண்டார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் தான் இயக்குநர் விஜய் – ஐஸ்வர்யா தம்பதிக்கு (30/05/2020) அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து அப்பாவான விஜய்க்கு  ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறினர். இந்நிலையில் முதன்முதலாக மருத்துவமனையில் தனது மகனை கையில் ஏந்தியிருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மூக்கும், முழியுமாக அப்படியே அப்பாவை உரிச்சி வைச்சிருக்கான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news