செம சர்ப்ரைஸ்.. செல்வராகவன் போட்ட அதிரடி ட்வீட்!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதன் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அவரை நச்சரித்து வந்தனர்.

இந்நிலையில் 10 ஆண்டுகள் கழித்து ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

ஆயிரத்தின் ஒருவன் படத்தில் முதல் பாகத்தில் கார்த்தி, பார்த்திபன், ரியாசென், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் கார்த்திக்கு பதிலாக தனுஷ் நடிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளிவரும் எனச் செல்வராகவன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது, தற்போது, செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.அதில், தனுஷ் நடிப்பில் நான் இயக்கவுள்ள 12 வது படத்தில்( தனுஷின் 42 படம் ) படத்தின் முக்கிய அறிவிப்பை மாலை 7:10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகரகள் உற்சாகமடைதுள்ளனர்.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news