‘ரௌடி பேபி’போல் பாடல் !தனுஷ் 43

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ விரைவில் வெளிவரவிருக்கின்றன. மித்ரன் ஜவகர், ராம்குமார், செல்வராகவன் இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். அதற்கு முன்பாக, கார்த்திக் நரேனின் பெயரிடப்பட்டாத ‘தனுஷ் 43’ படத்தில் நடிக்கவுள்ளார்.

சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகை ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி உள்ளிடோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சி ஒன்றைப் படமாக்குவதுடன் துவங்கியது. ‘ரௌடி பேபி’ பாடலுக்கு நடனம் அமைத்த ஜானியின் நடன இயக்கத்தில் அப்பாடல் படமாக்கப்பட்டது.


விவேக் எழுதி, தனுஷ் பாடிய அந்தப் பாடல் ஒரு அதிரடியான பாடலாக படமாக்கப்பட்டுள்ளது என்கிறார் நடன இயக்குனர் ஜானி. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் தலைப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news