தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி தடுப்பூசி!

 தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி தடுப்பூசி!

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா பரவுவது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. கொரோனா பன் மடங்கு உயராமல் தடுக்க பொதுமக்கள் இந்த காலகட்டத்தில்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.முககவசம் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் போது தான் பலருக்கு இது பரவி விடுகிறது. எனவே இது பரவாமல் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம். அதேபோல் முககவசம் அணிவதும் நோய் பரவுவதை தடுக்கும் வழிமுறையாகும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்லும் போதும் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம் என்பதால், ஒவ்வொருவரும் அரசு வழிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

அ ண்மையில் தஞ்சாவூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இப்படித்தான் கொரோனா பரவி விட்டது. எனவே முக கவசம் அணியாமல் சென்றாலோ, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தாலோ அல்லது கைகழுவாமல் இருந்தாலும் அடுத்த சில மாதங்களில் நமக்கு கொரோனா நோய் வர வாய்ப்புள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட எந்த நோயும் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இதற்கு முன்பதிவு செய்ய அவசியம் இல்லை. ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது அடையாள அட்டை வைத்திருந்தால் போதும். அருகில் உள்ள மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

 • 11 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !