தமிழகத்தில் ஒரே நாளில் 1437 பேருக்கு கொரோனா தொற்று..

தமிழகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: –
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 633 பேருக்கும், செங்கல்பட்டில் 178 பேருக்கும், கோவையில் 133 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,71,440 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 6 பேர் மற்றும் அரசு மருத்துவமனயில் 6 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,630 ஆக அதிகரித்துள்ளது.தொற்று பாதிப்பை கண்டறிய நேற்று 80,634- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,. கோவை, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.