உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
விஜய் ஆண்டனி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘கோடியில் ஒருவன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் கோடியில் ஒருவன். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, கோடியில் ஒருவன் திரைப்படம் மே 14-ஆம் தேதி ரம்ஜான் தினத்தன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் வெளியாகவுள்ளது.