‘வலிமை’ படத்தின் FIRST LOOK 🔥 வெளியீட்டு தேதி! உற்சாகத்தில் ரசிகர்கள் …

 ‘வலிமை’ படத்தின் FIRST LOOK 🔥 வெளியீட்டு தேதி! உற்சாகத்தில் ரசிகர்கள் …

நேர்கொண்ட பார்வை வெற்றிக்குப் பின்னர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோரோனா லாக்டவுனால் தடைபட்டு மீண்டும் தொடங்கி 90 சதவீதம் வரை முடிந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மீதமுள்ள படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் ரசிகர்களுக்காக இதுவரை ஒரு போஸ்டர் கூட வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது படக்குழு. இது சம்மந்தமாக முன்னதாக போனி கபூரை கேலி செய்யும் விதமாக சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதும், அரசியல் மேடைகள் மற்றும் கிரிக்கெட் மைதானங்களில் வலிமை அப்டேட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் சுற்றி வந்தனர்.

இது ஒருவகையான ட்ரெண்டாக மாற, ரசிகர்களின் இந்தச் செயலுக்கு நடிகர் அஜித் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு, இந்தச் செயலை அஜித் ரசிகர்கள் தவிர்த்துவந்தனர். இந்நிலையில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • 33 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !