மண் தரையில் தூங்கிய சிம்பு – வைரலாகும் படம்!

 மண் தரையில் தூங்கிய சிம்பு – வைரலாகும் படம்!

நடிகர் சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு முன்பே தொடங்கிவிட்டாலும், கொரோனா காரணமாக மற்ற படங்களைப் போல், இதன் ஷூட்டிங்கும் பாதிக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், மீண்டும் வேலைகள் தொடரப்பட்டது. அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் மண் தரையில் நடிகர் சிம்பு படுத்துத் தூங்கிய புகைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • 7 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !