கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை – செந்தில்

 கொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை – செந்தில்

தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகர் செந்தில். இவர் தற்போது நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜனதாவில் இணைந்து பிரச்சாரம் செய்தார்.

இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.தற்போது செந்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் எனக்கு கொரோனா தொற்று வந்தது உண்மைதான். கொரோனா வந்தால் யாரும் பயப்பட தேவையில்லை. ஊசி போட்டுக் கொண்டு வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள். மருந்து மாத்திரையை தவறாமல் உட்கொள்ளுங்கள்.

ஊசி போட்டதால்தான் எனக்கு பெரியளவிற்கு பாதிப்பு இல்லை. அதுபோல் நீங்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வீடியோ கூறியிருக்கிறார்.

 • 9 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !