சசிக்குமாரின் ’எம்ஜிஆர் மகன்’ படத்தின் முக்கிய அட்டேட் !

 சசிக்குமாரின் ’எம்ஜிஆர் மகன்’ படத்தின் முக்கிய அட்டேட் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அக்கதையில் சசிகுமார் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முழுமையான படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து உள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டால் தீபாவளி வெளியீடு என்று முன்பு திட்டமிட்டது. ஆனால், திரையரங்குகள் திறப்பு தாமதத்தால் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. தீபாவளி அன்று ட்ரெய்லரை மட்டும் வெளியிட்டது.

இந்நிலையில், அந்தோணிதாசன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் பாடல்களை சோனி மியூசிக் லேபிளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 3 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !