ரஜினிகாந்திற்கு ‘தாதாசாஹிப் பால்கே’ விருது!

 ரஜினிகாந்திற்கு ‘தாதாசாஹிப் பால்கே’ விருது!

இந்திய சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 51 வது தாதாசாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.இந்த விருதை மத்திய தகவல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். தாதாசாகேப் பால்கே விருது இந்திய சினிமாவுக்கு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசு வழங்கிய விருது.

https://www.inandoutcinema.com/

இந்திய சினிமாவின் தந்தை தாதாசாகேப் பால்கேவின் 100 வது பிறந்த நாளான 1969 முதல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “இந்திய சினிமாவில் முக்கிய பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் விருது அறிவிக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார். ரஜினிக்கு முன்னதாக இந்த விருது தமிழில் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் பாலச்சந்தருக்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 ஆம் ஆண்டில் அமிதாப் பச்சன் இந்த விருதை வென்றார்.

 • 27 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !