ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
வைரலாகும் ராய் லட்சுமியின் பிகினி வீடியோ!

தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம்தான் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார்.
படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. தனது அடுத்த படத்தின் வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்து வருகிறார்.
இதையடுத்து பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பின்க் நிற பிகினி அணிந்து ஒரு கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.