சூர்யா பட நடிகை திடீர் திருமணம்!

 சூர்யா பட நடிகை திடீர் திருமணம்!

தமிழில் ‘உதயன்’, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது ஹிந்தியில் ‘பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ மற்றும் ‘ஹங்கமா 2’ ஆகிய படங்களில் நடித்துவரும் நிலையில், தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம் செய்துகொண்டார்.

நேற்று (30.05.2021) நடந்த திருமணத்தில் இருவீட்டார், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இத்திருமணத்தை தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் இவர்களது திருமண வரவேற்பை நடத்த ப்ரணிதா தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். இவர்களது இந்த திடீர் திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

 • 18 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !