பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் மேதகு… ஓடிடியில் ரிலிஸ்!

 பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் மேதகு… ஓடிடியில் ரிலிஸ்!

இந்த மேதகு திரைப்படம் வெளியாகும் BS value OTT தளம் ஏற்கனவே பிரபலமான Black sheep என்கின்ற நிறுவனத்தின் Pay Per View என்கின்ற வசதியின் கீழ் முதன்முறையாக வெளிவரவிருக்கின்றது.

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெற்ற போராளியும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை தோற்றுவித்த தலைவருமான திரு. வே. பிரபாகரன் அவர்களின் ஆரம்ப கால வரலாற்றை மையமாக வைத்QQது “மேதகு” என்ற தமிழ் திரைப்படத்தை, தமிழீழ திரைக்களம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் உலக தமிழர்கள் நன்கொடை திரட்டல் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் முதல் BS value வலை தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது .

பிரபாகரன் எதனால் ஆயுத வழி போராட்டத்தை தேர்ந்தேடுத்தார் என்பதும் காட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தை கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் தி.கிட்டு. கடந்த ஆண்டே தயாராகிவிட்ட இந்த படம் இப்போது ஓடிடியில் நேரடியாக ரிலீஸாக உள்ளது.

இது குறித்து நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்து பேசினர்.  திரித்துக் கூறும் வகையில் தற்போது சில வலைத்தொடர்கள் வெளி வந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேதகு திரைப்படம் அமையும் எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

 • 17 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !