மிரட்டலான ‘#நாரப்பா’ ட்ரைலர் இதோ…

 மிரட்டலான ‘#நாரப்பா’ ட்ரைலர் இதோ…

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை, தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘நாரப்பா’ என்ற இந்த படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மஞ்சுவாரியர் நடித்த வேடத்தில் ப்ரியாமணி நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.

அப்படியே திறந்தாலும், கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு, ரசிகர்கள் திரையரங்கு பக்கம் வர சில நாட்கள் எடுக்கும் என்றே கருதப்படுகிறது. எனவே தற்போது ‘நாரப்பா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான விளம்பர வேலைகளை அமேசான் ஓடிடி தளம் ஆரம்பித்துவிட்டது. இதை அடுத்து படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. சற்று முன்பு வெளியேயுள்ள ட்ரைலர் மக்கள் இடையே எவ்ளோ வரவேற்பு பெரும் என்பதை பார்ப்போம்

  • 937 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !