“லாக்டவுன் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம்” – ‘மாநாடு’ தயாரிப்பாளர் அதிரடி!

 “லாக்டவுன் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம்” – ‘மாநாடு’ தயாரிப்பாளர் அதிரடி!

‘ஈஸ்வரன்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்துவரும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் கடந்த மே 14ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவு காரணமாக சொன்ன தேதியில் ‘மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியிடப்படாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் இப்படத்தின் சிங்கிள் பாடல் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார். அதில்… “பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்துகொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும் கரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று ‘மாநாடு’ படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும்.

லாக்டௌன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள். நன்றி” என கூறியுள்ளார். வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே. சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி. மகேந்திரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

 • 11 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !