உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
கவினின் ‘லிஃப்ட்’ படத்துக்காக ஒரு பாடல் பாடிய பிரபல நடிகர் !

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின், தற்போது ‘லிஃப்ட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் வேலைகள் நிறைவடைந்தது, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். அந்தப் பாடலை தயாரிப்பு நிறுவனம் ‘சிங்கிள் ட்ராக்’ முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களின் பாடல்களை பாடி வருகிறார். இந்த நிலையில், கவின் தன்னுடைய நண்பர் என்பதால் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பாடிக் கொடுத்துள்ளார்.