மிரட்ட வரும் ‘#கருங்காப்பியம்’ …. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 மிரட்ட வரும்   ‘#கருங்காப்பியம்’ …. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

யாமிருக்க பயமே, காட்டேரி மற்றும் கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கியவர் டிகே. இவர் படங்களில் எப்போதும் 18+ விஷயங்கள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இவர் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி மற்றும் ஷெர்லின் ஆகிய நடிகைகள் நடிக்கும் கருங்காப்பியம் என்ற பேய் படம் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள்  நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்நிலையில் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் ஐந்து நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 229 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !