விவேக் மருத்துவமனையில் அனுமதி: அதிர்ச்சியில் ரசிகர்கள் !

 விவேக்  மருத்துவமனையில் அனுமதி: அதிர்ச்சியில் ரசிகர்கள் !

நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக விவேக் பல படங்களில் நடித்து வந்துள்ளார்.

ரசிகர்களாலும் சினிமா துறையினராலும் சின்னக் கலைவாணர் என்று கொண்டாடப்படும் விவேக் தனது நகைச்சுவையில் சமூக சீர்திருத்த கருத்துகளைப் பரப்பி வந்தார்.

அதுமட்டுமில்லாமல், நடிகர் விவேக், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு என சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிப்பவராகவும் அவர்களுக்கு ஆதரவு தருபவராகவும் இருந்து வருகிறார்.

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், சமூக சேவை பணிகளிலும் ஓய்விலும் இருந்து வந்த நடிகர் விவேக், நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை தனது நகைச்சுவை மூலம் கொண்டு சென்று ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

  • 7 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !