பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தாய் மறைவு ! திரையுலகினர் இரங்கல்!!

 பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தாய் மறைவு ! திரையுலகினர் இரங்கல்!!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கைஅமரன் அவர்களின் மனைவியும் இயக்குனர் வெங்கட்பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் ஆகியோர்களின் தாயாருமான மணிமேகலை கங்கைஅமரன் அவர்கள் நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 69

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிமேகலை கங்கைஅமரன் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு 11 மணிக்கு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கங்கை அமரன் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 • 37 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !