களைகட்டும் கர்ணன் ‘FDFS’ திருவிழா!

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் திட்டமிட்டப்படியே இன்று (ஏப்ரல் 9) ரிலீஸ் ஆகி உள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க திடீரென நேற்று தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.தியேட்டர்களில் வெறும் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அதிரடி அறிவிப்பால் பின் வாங்காமல் அவன் வருவான் என ட்வீட் போட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் கலைப்புலி எஸ். தாணு கர்ணனை களமிறக்கி உள்ளனர்.
இன்று , அதிகாலை காட்சியாக வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்காக தியேட்டர்களை திருவிழாவாக மாற்றி உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். தனுஷின் கட் அவுட்களும் திரையரங்குகளை அலங்கரித்து வருகின்றன.தியேட்டர் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர்.கோனாரே எங்கேடா என்பது போல் இருந்தது