‘பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பு வருகிறது’ – வைரலாகும் சீயான் விக்ரம் போட்டோ!!

 ‘பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பு வருகிறது’ – வைரலாகும் சீயான் விக்ரம் போட்டோ!!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை தொடர்ந்து, நடிகர் விக்ரம் அடுத்ததாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பும் வருகிறது. தங்கலான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனுடன் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

  • 11 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !