கால் டாக்சி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

 கால் டாக்சி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் – தெலுங்கு மொழி ரீமேக் படத்தில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அடுத்ததாக க்ரைம் த்ரில்லர் எனக் கூறப்படும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தில் ஐஸ்வர்யா கேப் டிரைவராக நடிக்கிறார்

‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை, 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கி படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.

சென்னையில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படப்பூஜை நடத்தி, படப்பிடிப்பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு. ஜிப்ரான் இசையமைக்கிறார் .

இப்படம் பற்றி இயக்குநர் கின்ஸ்லின் “ஒரு கேபியுடன் முன்னணி படங்களில் பல படங்கள் இல்லை, அதுவும் ஒரு பெண் டிரைவர். இந்த படம் ஒரு கேபியின் பயணத்தைத் தொடர்ந்து, ஒரு ஓட்டுநராக அவரது உலகில் பயணங்களை காட்டும் படம் , ”என்று கூறுகிறார்,

  • 15 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !