வெப் தொடரை தயாரிக்கும் “AVM” நிறுவனம்!

 வெப் தொடரை தயாரிக்கும் “AVM” நிறுவனம்!

75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.

ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு ‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகிறது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடரை வெளியிட உள்ளனர். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது.

ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது. இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது. மேலும் திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரை பற்றியும் சொல்கிறது.

SONY LIV உடன் இணைந்து பார்வையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி. அறிவழகன் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனருடன், இணைந்து வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

 • 10 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !