அட்லீ – ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்!

 அட்லீ – ஷாருக் கான் இணையும் திரைப்படம் குறித்த வேற லெவல் தகவல்!

இயக்குனர் அட்லீ பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானை இயக்கத் தயாராகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இது குறித்த தகவல் கடந்த 2 வருடங்களாக வலம் வருகிறது.

தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட கமர்ஷியல் படங்களை பேக் டு பேக் ஹிட் படங்களாக விஜய் நடிப்பில் இயக்கிய அட்லீ, ஷாருக் கானை இயக்கவிருக்கும் தகவல் வெளியானது முதலே ஏறக்குறைய விஜய் ரசிகர்களும் பெருத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்தப் படம் கைவிடப்பட்டதாக யூகங்கள் எழுந்த நிலையில், இப்படம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதானின் படப்பிடிப்பில் இருக்கும் ஷாருக்கான், அட்லீ படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறாராம். 2021 ஆகஸ்டில் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் முந்தைய தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக உள்ளாராம் அட்லீ.

ஷாருக் கான் 2019-ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள அட்லீ அலுவலகத்திற்கு சென்றதிலிருந்து, இந்தப் படத்தைப் பற்றிய சலசலப்பு இன்னும் ஓயவில்லை. இதற்கிடையே விஜய்யின் 66-வது படத்தை இயக்குபவர்களின் பட்டியலில் அட்லீயின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஒருவேளை இது உண்மையானால், விஜய் – அட்லீ இணையும் 4-வது படமாக அது இருக்கும்.

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • 14 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !