பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
‘பணம் உலகை காலி பண்ணிடும்..’ கவனம் ஈர்க்கும் விஜய் ஆண்டனி ட்வீட்!!

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து இவர் தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், ‘பிச்சைக்காரன் -2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படத்தின் முதல் 4 நிமிடம், ஆரம்ப காட்சி ஸ்னீக் பீக் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “பணம் உலகை காலி பண்ணிடும்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.