நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் அக்‌ஷய்குமாரின் படங்கள்!

 நேரடியாக ஓ.டி.டி.யில் ரிலீசாகும் அக்‌ஷய்குமாரின் படங்கள்!

கொரோனா ஊரடங்கால் திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிட்டு வருகிறார்கள். முன்னணி கதாநாயகர்கள் படங்களும் ஓ.டி.டி.யில் வருகின்றன.

இந்த நிலையில் அக்‌ஷய்குமார் நடித்துள்ள ‘பெல்பாட்டம்’ இந்தி படமும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது. 1980-களில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் தயாராகி உள்ளது. ரஞ்சித் எம்.திவாரி இயக்கி உள்ளார்.

கியூமா குரோஷி, வாணி கபூர், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘பெல்பாட்டம்’ படத்தை தியேட்டரில் வெளியிட முடிவு செய்து இருந்தனர். ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் ஓ.டி.டி.யில் வருகிறது.

  • 7 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !