பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
ஜெயம் ரவி நடித்த ’#அகிலன்’ ரிலீஸ்.. எப்படி இருக்கு படம் ? ட்விட்டர் ரிவ்யூ!!

பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் அகிலன் படத்தை எடுத்துள்ளார். இதில் ஜெயம்ரவியுடன் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிசந்திரன், ஹரிஸ் பெரேடி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒரு ஹார்பர், அங்கு இருக்கும் கடத்தல் கும்பல், சோதனை அதிகாரிகளின் செயல்பாடுகள், அதில் இருக்கும் அரசியல் ஆகியவற்றை சுற்றியே திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பரத்தாமனிடம் கடத்தல் உள்ளிட்ட குற்ற வேலைகளை நாயகன் அகிலன் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து வெளியேறி அதே ஹார்பரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் அகிலன். எந்த விஷயம் வைரலாக வேண்டும், தனக்கு யார் எதிரியாக, துரோகியாக இருக்க வேண்டும் என்பதையும் அவனே முடிவு செய்கிறான். இதனால் இருவருக்கும் பகை உருவாகிறது, ஹார்பரில் சட்டவிரோத வேலைகள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் கோகுல் என்ற அதிகாரி திணறுகிறார். இதற்கு பின் நடிக்கும் சம்பவங்களும் காரணங்களுமே அகிலன் திரைப்படம்.
இந்தப் படத்தில் ஹார்பரை கதைகளமாக எடுத்துகொண்டு, அதன் பின்னால் நடக்கும் வியாபர கொள்ளை மற்றும் அதனால் உலக முழுவதும் உள்ள சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற அரசியலை சொல்ல இயக்குனர் முயற்சித்துள்ளார். அதாவது சாதாரண மக்கள் பயன்படுத்தும் வெங்காய விலை முதல் பங்கு சந்தை வியாபாரம் வரை அனைத்தையும் நிர்ணயம் செய்யவது Sea Traffic என கூறியுள்ளார்.
உலக மக்களின் பசியை நிர்ணயம் வியாபாரத்தின் அரசியலை சொல்ல முயற்சித்தாலும், அதை அழுத்தமாக சொல்லாமல் விட்டுவிட்டனர். அதை மையப்படுத்தி கதையும், காட்சிகளையும் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதைவிட்டுவிட்டு ஹார்பார், அதில் நடக்கும் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துளனர்.